பிவண்டியில் போலி ரேஷன் கார்டு தயாரித்து விற்ற 3 பேர் கைது


பிவண்டியில் போலி ரேஷன் கார்டு தயாரித்து விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 Sept 2023 5:48 PM IST (Updated: 25 Sept 2023 5:48 PM IST)
t-max-icont-min-icon

பிவண்டி பகுதியில் போலி ரேஷன் கார்டுகளை தயாரித்து விற்பனை செய்து வந்த 3 பேரை போலீசார் கைது

தானே,

தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள ஒரு ரேசன் கடையில் போலி ரேஷன் கார்டுகள் விற்கப்படுவதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலி வாடிக்கையாளரை அனுப்பி ஏஜெண்டுகளை அணுகி விசாரித்தனர். இதில் ஏஜெண்ட் உள்பட ரேசன் கடை உரிமையாளர் சேர்ந்து ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.8 ஆயிரம் பெற்று போலியாக தயாரித்து விற்று வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த ரேஷன் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அங்கிருந்த போலி ரேஷன் கார்டுகள், சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் கடை உரிமையாளர் நவுசாத் ராய், ஏஜெண்டுகளான இர்பான் அலி அன்சாரி, சஞ்சய் போதே ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இது குறித்து நிஜாம்புரா போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story