மும்பை தானேயில் 18 ஆட்டோக்களை திருடி விற்ற 4 பேர் பிடிபட்டனர்
மும்பை, தானேயில் 18 ஆட்டோக்களை திருடி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
மும்பை, தானேயில் 18 ஆட்டோக்களை திருடி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 பேர் பிடிபட்டனர்
தானே மாவட்டம் பிவண்டி நதிநாக்கா பகுதியில் திருட்டு ஆட்டோக்களை விற்க கும்பல் வரவுள்ளதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி விசாரித்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் திருட்டு ஆட்டோக்களை விற்க வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ரஷித்கான், சையத் அலி சேக், சித்திக், ஜமீல் அன்சாரி ஆகிய 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
18 ஆட்டோக்கள் திருட்டு
இவர்களிடம் நடத்திய விசாரணையில் மும்பை, தானேயில் ஆட்டோக்களை திருடி பின்னர் போலி நம்பர் பிளேட்களை பொருத்தி துலே, நந்தூர்பர், மலேகாவ், ஜல்காவ் ஆகிய இடங்களுக்கு கொண்டு சென்று ஆட்டோக்களை விற்று வந்தது தெரியவந்தது. இது வரையில் அவர்கள் 18 ஆட்டோக்களை திருடி விற்று உள்ளனர். ஆட்டோ திருடி வந்த கும்பல் பிடிபட்டதை தொடர்ந்து பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ள 12 வழக்குகள் முடிவுக்கு வந்தது. திருடப்பட்ட ஆட்டோக்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.