ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் சிக்கினார்
தானேயில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்
தானே,
மராட்டிய அரசு நிறுவனமான ஜூவன் பிரதிகரனில் சீனியர் குமாஸ்தாவாக பணியாற்றி வருபவர் ஸ்ரீபத் காடே (வயது52). இவரது அலுவலகத்தில் ஒருவர் ஒப்பந்ததாரராக பதிவு செய்ய விண்ணப்பித்து இருந்தார். இவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த குமாஸ்தா ஸ்ரீபத் காடே தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டார். ஆனால் பணம் தருவதாக கூறிய நபர், சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் யோசனைப்படி ரூ.5 ஆயிரம் கொடுத்தபோது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஸ்ரீபத் காடேயை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story