கல்யாண் ஆகாய நடைமேம்பாலத்தில் நடைபாதை வியாபாரியை நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்கியதால் பரபரப்பு
கல்யாண் ஆகாய நடைமேம்பாலத்தில் நடைபாதை வியாபாரியை நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
கல்யாண் ஆகாய நடைமேம்பாலத்தில் நடைபாதை வியாபாரியை நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வியாபாரிகள் மீது தாக்குதல்
கல்யாண் ரெயில் நிலையம் அருகில் உள்ள ஆகாய நடைமேம்பாலத்தில் சிலர் திரண்டு அங்கு இருந்த நடைபாதை வியாபாரிகளை சரமாரியாக தாக்கும் வீடியோ நேற்று சமூகவலைதளத்தில் பரவியது. விசாரணையில் அந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது தெரியவந்து உள்ளது. மேலும் வியாபாரிகளை தாக்கியது ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) கட்சியினர் என்பது தெரியவந்தது.
காரணம் என்ன?
சம்பவத்தன்று மராத்தியர் ஒருவர் நடைபாதை வியாபாரியிடம் பொருள் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த பொருள் சரியில்லை என தெரிகிறது. எனவே அவர் வாங்கிய பொருளை திருப்பி கொடுக்க சென்றதாகவும், அப்போது அவரை நடைபாதை வியாபாரி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த நவநிர்மாண் சேனா கட்சியினர் கல்யாண் ஆகாய நடைமேம்பால நடைபாதை வியாபாரிகளை தாக்கி உள்ளனா். இந்த சம்பவம் குறித்து இதுவரை தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என போலீசார் கூறினர்.