மராட்டிய ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கழன்று ஓடிய என்ஜினால் பரபரப்பு - பயணிகள் அதிர்ச்சி
மராட்டிய ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கழன்று ஓடிய என்ஜினால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மும்பை,
மராட்டிய ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கழன்று ஓடிய என்ஜினால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
என்ஜின் பிரிந்தது
மும்பை போரிவிலியில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 19417) நேற்று மதியம் 1.30 மணி அளவில் புறப்பட்டது. இந்த ரெயில் பிற்பகல் 2.15 மணி அளவில் விராரை அடுத்த ரெயில் நிலையமான வைத்தர்ணா அருகே வந்தது. அப்போது திடீரென ரெயில் என்ஜின் தனியாக கழன்று ஓடியது. என்ஜினுக்கும், ரெயில் பெட்டிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இந்த விபரீதம் நடந்தது. இந்த சம்பவம் நடந்தபோது டமார் என்ற சத்தம் கேட்டது. பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டனர். சிறிது தூரம் ஓடிய என்ஜினரை டிரைவர் நிறுத்தினார். ரெயில் பெட்டிகளும் சிறிது தூரம் ஓடியபடி நின்றது.
பெரும் விபத்து தவிர்ப்பு
ரெயில் மெதுவாக சென்று கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரெயில் பெட்டியுடன் என்ஜினரை இணைத்தனர். இதன்பின்னர் தாமதமாக அங்கிருந்து ரெயில் புறப்பட்டு ஆமதாபாத் நோக்கி சென்றது. பயணிகளை பதற்றத்துக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.