டிரைவரை தாக்கி வாடகை காரை கடத்தியவர்களுக்கு வலைவீச்சு
டிரைவரை தாக்கிவிட்டு வாடகை காரை கடத்தி சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பை,
டிரைவரை தாக்கிவிட்டு வாடகை காரை கடத்தி சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆன்லைன் நிறுவன வாடகை கார்
தானேயை சேர்ந்தவர் கார் டிரைவர் அப்துல் செய்யது ரென்(வயது38). இவர் தனியார் ஆன்லைன் வாடகை கார் நிறுவனத்துக்காக வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த புதன்கிழமை பத்லாப்பூரில் இருந்து தானே செல்ல இவரது காரை சிலர் புக் செய்தனர். அப்துல் செய்யது ரென் சவாரி புக் செய்த 6 பேரை காரில் ஏற்றிக்கொண்டு பத்லாப்பூரில் இருந்து தானே சென்றார்.
கார் கடத்தல்
கார் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்ற போது 6 பேரும் சேர்ந்து கார் டிரைவரை தாக்கினர். மேலும் டிரைவரிடம் இருந்த பணம், செல்போனை பறித்தனர். பின்னர் அந்த கும்பல் டிரைவரை கீழே இறக்கிவிட்டு ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை கடத்தி சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட காா் டிரைவர் பத்லாப்பூர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தாக்கி காரை கடத்தி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.