கோரேகாவ் பிலிம் சிட்டியில் மின்சாரம் தாக்கி எலக்டிரீசியன் பலி
கோரேகாவ் பிலிம் சிட்டியில் மின்சாரம் தாக்கி எலக்டிரீசியன் பலியானார்
மும்பை,
மும்பை கோரேகாவ் பிலிம் சிட்டி பகுதியில் சோப்பு விளம்பரத்திற்கான சூட்டிங் நடந்தது. அங்கு எலக்டிரீசியனாக மகேந்திரா யாதவ் என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை சூட்டிங் நடந்த போது அங்கு வேலை பார்த்து வந்த மகேந்திரா யாதவ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிலிம்சிட்டி யூனியன் தலைவர் குப்தா வலியுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story