உருட்டு கட்டையால் மகனை அடித்து கொன்ற தந்தை கைது


உருட்டு கட்டையால் மகனை அடித்து கொன்ற தந்தை கைது
x
தினத்தந்தி 21 Sept 2023 12:45 AM IST (Updated: 21 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

சகாப்பூரில் மகனை உருட்டுகட்டையால் அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்

தானே,

தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகா அகாய் கிராமத்தை சேர்ந்தவர் மதுக்கர் ஜாதவ் (55). இவரது மகன்கள் ராம் (35), விஷ்ணு (27). கடந்த 16-ந்தேதி இரவு ராம் தம்பியின் மனைவியான மைத்துனி குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனை கேட்ட தந்தை மதுக்கர் ஜாதவ் அவரிடம் தகராறு செய்தார். இந்த தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த மதுக்கர் ஜாதவ் தனது 2-வது மகன் விஷ்ணுவுடன் சேர்ந்து உருட்டு கட்டையால் ராமை தாக்கினார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ராம் மண்டை உடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 17-ந்தேதி மதுக்கர் ஜாதவ், மகன் விஷ்ணுவை கைது செய்தனர். தந்தையே மகனை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story