வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை பறித்த காவலாளி கைது


வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை பறித்த காவலாளி கைது
x
தினத்தந்தி 23 Sept 2023 1:15 AM IST (Updated: 23 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகையை பறித்தது சென்ற காவலாளியை போலீசார் கைது செய்தனர்

வசாய்,

தானே மாவட்டம் பயந்தர் பகுதியை சேர்ந்த 82 வயது மூதாட்டி கடந்த 19-ந்தேதி இரவு 10 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர் மூதாட்டி இருந்த வீட்டிற்குள் நுழைந்தார். மூதாட்டியை தாக்கி விட்டு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது பற்றி போலீசில் மூதாட்டி புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் அருகே உள்ள கட்டிடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த நேபாள நாட்டை சேர்ந்த ராஜேந்திர பகதூர் (வயது42) என்பதும், அவர் தலைமறைவானதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க விசாரித்த போது அவர் சாலாசர் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையெடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட நகைகளையும் மீட்டனர்.


Next Story