இடஒதுக்கீடு உச்சவரம்பை மேலும் 16 சதவீதம் அதிகரிக்க வேண்டும்; சரத்பவார் யோசனை


இடஒதுக்கீடு உச்சவரம்பை மேலும் 16 சதவீதம் அதிகரிக்க வேண்டும்; சரத்பவார் யோசனை
x
தினத்தந்தி 5 Sep 2023 7:00 PM GMT (Updated: 5 Sep 2023 7:00 PM GMT)

இடஒதுக்கீடு உச்சவரம்பை மேலும் 16 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என சரத்பவார் கூறியுள்ளார்.

மும்பை,

இடஒதுக்கீடு உச்சவரம்பை மேலும் 16 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என சரத்பவார் கூறியுள்ளார்.

மராத்தா சமூகத்தினர் போராட்டம்

இந்தியாவில் பல்வேறு பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதமாக இருக்கிறது. இந்த உச்சவரம்பு காரணமாக மராட்டியத்தில் மராத்தா போன்ற சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாத நிலை உள்ளது. இடஒதுக்கீடு கேட்டு மாநிலம் முழுவதும் மராத்தா சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மராத்தா சமூகத்தினர் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

16 சதவீதம் அதிகரிக்க வேண்டும்

இந்தநிலையில் இடஒதுக்கீடு உச்ச வரம்பை மேலும் 15 முதல் 16 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் நேற்று மராட்டிய மாநிலம் ஜல்னாவில் நிருபர்களிடம் கூறியதாவது:- இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் மேலும் சில சமூகத்தினரை சேர்த்தால், ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட பிரிவில் சலுகை பெற்று வரும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அவ்வாறு கூறப்படுவதை நாம் புறக்கணிக்க முடியாது. இடஒதுக்கீடு உச்ச வரம்பை 50 சதவீதத்தில் இருந்து மேலும் 15, முதல் 16 சதவீதம் வரை உயர்த்தி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால் மராத்தா சமூகத்தினருக்கு பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் இடஒதுக்கீடு வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினாா்.


Next Story