போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது - டெல்லியில் சிக்கினார்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி டெல்லியில் கைது செய்யப்பட்டார்
மும்பை,
மும்பையில் கடந்த ஜூன் மாதம் கூரியர் நிறுவனத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 500 கிராம் கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து போதைப்பொருள் தொடர்பாக விசாரித்தனர். இதில் நாலாச்சோப்ராவை சேர்ந்த 2 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்த டிஜிட்டல் சாதனங்களை கொண்டு நடத்திய ஆய்வில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மற்றொருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் டெல்லி உத்தம் நகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் டெல்லி சென்று அங்கு பதுங்கி இருந்த நைஜிரீயரை பிடித்து கைது செய்தனர். இவரை மும்பை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story