நாட்டின் பெயரை மாற்றும் உரிமை யாருக்கும் இல்லை - சரத்பவார் கருத்து
நாட்டின் பெயரை மாற்றும் உரிமை யாருக்கும் இல்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
மும்பை,
நாட்டின் பெயரை மாற்றும் உரிமை யாருக்கும் இல்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
'பாரத' ஜனாதிபதி
ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 9, 10-ந் தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட பல நாட்டின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஜி-20 மாநாட்டின் இரவு விருந்து அழைப்பிதழில் 'பாரத' ஜனாதிபதி என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
யாருக்கும் உரிமையில்லை
நாட்டின் பெயர் தொடர்பான விவகாரத்தில் ஆளும் கட்சி ஏன் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பது எனக்கு புரியவில்லை. நாட்டின் பெயரை மாற்ற யாருக்கும் உரிமை கிடையாது. யாராலும் பெயரை மாற்றவும் முடியாது. 'இந்தியா' கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்து உள்ளார். புதன்கிழமை (இன்று) நடைபெற உள்ள அந்த கூட்டத்தில் நாட்டின் பெயர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்திய நாட்டின் பெயர் மாற்றப்படுமா? என கேட்டபோது, அதுபற்றி தனக்கு தெரியாது என சரத்பவார் கூறினார்.