திருடன் என கருதி தாக்கியதில் ஒருவர் பலி - 3 பேர் கைது
திருடன் என கருதி தாக்கியதில் ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்
வசாய்,
பால்கர் மாவட்டம் உம்ரோலி பகுதியில் கடந்த மாதம் 30-ந்தேதி ரமேஷ் பண்டாரி மற்றும் சகோதரர்களான பிரசாந்த், சந்தன் ஆகியோர் நடந்து சென்றுகொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் திருடர்களாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர், 3 பேரையும் வழிமறித்து விசாரித்தனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் 3 பேரையும் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் அவர்கள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 6-ந்தேதி ரமேஷ் பண்டாரி உயிரிழந்தார். இதனால் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர். இதில் 3 பேரின் அடையாளம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வினோத் பாட்டீல், ரபுல் காரட், குணால் ராவுத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாளை வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.