புற்றுநோயால் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி மரணம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி நேற்று உயிரிழந்தார்
புனே,
புனேயை சேர்ந்தவர் விஜய் ராமன் (வயது72). 1975-ம்ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு புற்றுநோய் பாதிப்பால் அவதி பட்டு வந்தார். இதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கடந்த 1981-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி இருந்தார். அவரது தலைமையில் போலீசார் பான்சிங் தோமர் என்ற பிரபல ரவுடியை என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். இறுதியாக சி.ஆர்.பி.எப் சிறப்பு இயக்குனர் ஜெனரலாக பதவி வகித்து வந்தார். அப்போது பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டு அமைப்புகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார்.
Related Tags :
Next Story