புனேயில் ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பு கூட்டம் தொடங்கியது- ஜே.பி. நட்டா பங்கேற்பு
புனேயில் ௩ நாட்கள் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பு கூட்டம் தொடங்கியது-. இதில் ஜே.பி. நட்டா பங்கேற்றார்.
மும்பை,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் ஒருங்கிணைப்பு கூட்டம் மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. இதில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மற்றும் அதன் 36 சார்பு அமைப்புகள் கலந்து கொண்டன.
இந்த கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே ஆகியோர் பாரத மாதா சிலைக்கு மலர்கள் தூவி தொடங்கி வைத்தனர்.
கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார். மேலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விசுவஇந்து பரிஷத், ராஷ்டிரீய சேவா பாரதி, அகில பாரதீய வித்யாரித்தி பரிஷத் உள்ளிட்ட சார்பு அமைப்புகளை சேர்ந்த 267 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தற்போதைய சமூக மற்றும் தேசிய சூழல், நாட்டின் பாதுகாப்பு, கல்வி, நாட்டுக்கான சேவை, பொருளாதாரம் போன்ற அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story