கிராபட் மார்க்கெட்டில் சவுதி அரேபிய பெண்ணிடம் பணப்பை திருட்டு; 3 பெண்கள் கைது


கிராபட் மார்க்கெட்டில் சவுதி அரேபிய பெண்ணிடம் பணப்பை திருட்டு; 3 பெண்கள் கைது
x
தினத்தந்தி 2 Oct 2023 1:15 AM IST (Updated: 2 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கிராபட் மார்க்கெட்டில் சவுதி அரேபிய பெண்ணின் பணப்பையை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்

மும்பை,

மும்பையில் உள்ள கிராபட் மார்க்கெட்டில் சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சம்பவத்தன்று வந்தார். இதனை கவனித்த அங்கிருந்த 3 பெண்கள் அவரை பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் 3 பெண்களும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிய சவுதி அரேபியா பெண் தனது பையை பார்த்தபோது அடிப்பகுதியில் கத்தியால் கீறப்பட்டு, அதில் இருந்த பணப்பை(மணி பர்சு) காணாமல் போய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் 3 பெண்கள் சேர்ந்து பணப்பையை திருடியது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கரா பகுதியை சேர்ந்த லஷ்மிபாய் சிசோடியா (வயது40), ரானு பானரா(45), அக்சிதா(22) ஆகியோர் என அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் மும்பையில் பதுங்கி இருந்த 3 பெண்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர்கள் மும்பையில் திருடி விட்டு சொந்த ஊரில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.


Next Story