டேங்கர் லாரி வெடித்து 4 பேர் பலி: தொழிற்சாலை நிர்வாகி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
டேங்கர் லாரி வெடித்து 4 பேர் பலியான சம்பவத்தில் தொழிற்சாலை நிர்வாகி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தானே,
டேங்கர் லாரி வெடித்து 4 பேர் பலியான சம்பவத்தில் தொழிற்சாலை நிர்வாகி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
உடல் சிதறி 4 பேர் பலி
தானே மாவட்டம் உல்லாஸ்நகர் சாகட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் நேற்று முன்தினம் காலை நைட்ரஜன் நிரப்பி இருந்த டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இந்த பயங்கர விபத்தில் தொழிற்சாலையில் டேங்கர் அருகே நின்று இருந்த 4 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 2 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு துண்டு, துண்டாக சிதறின. விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
3 பேர் மீது வழக்குப்பதிவு
டேங்கர் லாரி வெடித்த சத்தம் சுமார் 2 கி.மீ. சுற்றளவுக்கு கேட்டதாக பொதுமக்கள் கூறினர். சம்பவம் குறித்து உல்லாஸ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அலட்சியத்தால் மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தொழிற்சாலை நிர்வாகி, டேங்கர் லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.