மந்திராலயா கட்டிடத்தில் இருந்து வலையில் குதித்தவர் கைது


மந்திராலயா கட்டிடத்தில் இருந்து வலையில் குதித்தவர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2023 1:00 AM IST (Updated: 27 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

மந்திராலயா கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து வலையில் குதித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர்.

மும்பை,

மந்திராலயா கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து வலையில் குதித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர்.

வலையில் குதித்தார்

மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயா நரிமண் பாயிண்ட் பகுதியில் உள்ளது. நேற்று கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து ஒருவர் திடீரென கீழே கட்டப்பட்டு இருந்த வலையில் குதித்தார். மேலும் வலையில் உருண்ட நிலையில் தனக்கு அரசு வேலை தராத அதிகாரிகளை கண்டித்து கோஷம் போட்டார். இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 2-வது மாடிக்கு விரைந்து சென்றனர்.

கைது

வலையில் குதித்தவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும், ஆசிரியர் பணி நியமனம் கேட்டு மும்பைக்கு வந்ததாகவும், அதிகாரிகள் இழுத்தடித்து வந்ததால் கட்டிடத்தில் இருந்து குதித்ததாகவும் தெரிவித்தார். இது குறித்து ேபாலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கடந்த மாதம் 29-ந்தேதி நீர்பாசன திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு தரக்கோரி விவசாயிகள் பாதுகாப்பு அமைப்பினர் வலையில் குதித்து போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story