துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரர்


துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரர்
x
தினத்தந்தி 24 Sept 2023 1:30 AM IST (Updated: 24 Sept 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

காந்தி சவுக் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்

லாத்தூர்,

லாத்தூர் மாவட்டம் காந்தி சவுக் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பாண்டுரங் பிடலே(வயது 50). மந்தலே நகரை சேர்ந்த இவர் நேற்று விவேகானந்தா சவுக் போலீஸ் நிலையத்தில் லாக்-அப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் தனது சர்வீஸ் துப்பாக்கியை எடுத்து தலையில் சுட்டுக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த சக போலீசார் அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாண்டுரங் பிடலே இந்த விபரீத முடிவை எடுக்க காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story