கட்சி தாவல் தொடர்பான சட்டப்பிரிவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் - ஐகோர்ட்டில் பொதுநலன் மனு


கட்சி தாவல் தொடர்பான சட்டப்பிரிவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் - ஐகோர்ட்டில் பொதுநலன் மனு
x
தினத்தந்தி 29 Aug 2023 1:15 AM IST (Updated: 29 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கட்சி தாவல் தொடர்பான சட்டப்பிரிவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மும்பை,

கட்சி தாவல் தொடர்பான சட்டப்பிரிவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பொதுநலன் மனு

மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டதால் ஆட்சி மாற்றம் கண்டது. இதேபோல சமீபத்தில் தேசியவாத காங்கிரசில் பிளவை ஏற்படுத்திய அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்தார். இது தொடர்பான அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு உள்ள நிலையில் மும்பை ஐகோர்ட்டில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மீனாட்சி மேனன் என்பவர் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் கூறி இருப்பதாவது:-

4-வது பத்தி

அரசியல் சாசன சட்டத்தின் 10-வது அட்டவணையின் 4-வது பத்தி அரசியல் கட்சிகளில் ஏற்படும் பிளவு மற்றும் இணைப்புகளை விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி கட்சி தாவல் செய்து வாக்காளர்களுக்கு துரோகம் செய்யப்படுகிறது. அரசியல் குழப்பத்தால் பொதுமக்களின் கோடிக்கணக்கான வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே 10-வது அட்டவணையின் 4-வது பத்தியை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி உபாத்யாயா நீதிபதி ஆரிப் டாக்டர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கி விட்டு புதிதாக மனு தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story