பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு


பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2017 9:58 AM GMT (Updated: 25 Jan 2017 12:30 PM GMT)

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கபட்டு உள்ளது.


புதுடெல்லி

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பெரிய வடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மூத்த மகன் மாரியப்பன் தங்கவேலு  (வயது 21).  பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

இதை தொடர்ந்து மத்திய-மாநில அரசுகள் பல்வேறு பரிசுகளை அறிவித்தன. இந்த நிலையில் மத்திய அரசு மாரியப்பனுக்கு தற்போது பத்ம ஸ்ரீ விருது வழங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாரியப்பன், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை  தீபா கர்மாகர் உள்பட  2ப0 பேருக்கு பத்ம  ஸ்ரீ விருது அறிவிக்கபட்டு உள்ளது.

எய்ட்ஸ் நோய்க்கு எதிராக போராடிய தமிழகத்தை சேர்ந்த  டாக்டர் சுனிதி சாலமனுக்கு அவரது மறைவுக்கு பின்  பத்ம ஸ்ரீ விருது அறிக்கபட்டு உள்ளது.

களரி கற்றுகொடுக்கும் கேரளாவை சேர்ந்த மீனாட்சி அம்மாளுக்கு பத்ம  ஸ்ரீ விருது  அறிவிக்கபட்டு உள்ளது.


பத்ம ஸ்ரீ விருது க்கு அறிவிக்கபட்டு உள்ளவர்கள்

 * கேரளா களறி பயிற்றுக் கலைஞர் மீனாட்சி அம்மாள்
 * சிண்ட கிண்டி மல்லேசம் அறிவியல் மற்றும் பொறியியல்
 * தார்பள்ளி ராமையா -சமூக சேவை
 * பிபின் கனட்ரா சமூக சேவை   
 * எய்ட்ஸ் ஆராய்ச்சி மருத்துவர் சுனிதி சாலமன்
 * டாக்டர் சுப்யரோதோ தாஸ்மருத்துவம்
 * டாக்டர் பக்தி யாதவ் மருத்துவம்
 * அனுராதா கொய்ராலா சமூக சேவை
 * ஹரிமுல் ஹக் -சமூக சேவை
 * மாரியப்பன் தங்க வேலு
 * எழுத்தாளர் இலி அகமது
 * ஜிதேந்திர ஹரிபால்- இசை
 * சுகுரி பொம்ம கவுடா- -இசை
 * தீபா கர்மக்கர்- ஜிம்னாஸ்டிக் விளையாட்டு
 * அனந்த் அகர்வால் கல்வி
 * விவசாயம் ஜெனாபாய் தர்காபாய் படேல் விவசாயம்
 * பல்பீர் சிங் சேச்சிவால்  சமூக சேவை
 * ஹரீஷ் பரத்வாஜ் சமூக சேவை

பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், பின்னணிப் பாடகருமான கே.ஜே.யேசுதாஸுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.





Next Story