ஆஸ்திரேலியா காமன்வெல்த்: 2-வது தங்க பதக்கத்தை வென்றது இந்தியா


ஆஸ்திரேலியா காமன்வெல்த்: 2-வது தங்க பதக்கத்தை வென்றது இந்தியா
x
தினத்தந்தி 6 April 2018 2:04 AM GMT (Updated: 6 April 2018 8:02 PM GMT)

ஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டியில் இந்தியா 2-வது தங்க பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது. #CommonwealthGames

கோல்டுகோஸ்ட், 

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர். 

இந்த நிலையில், இன்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா சானு தங்க பதக்கம் வென்று அசத்தினார். காமென்வெல்த் போட்டியில் நேற்று, இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 3 பதக்கங்களை வென்றுள்ளது. 

Next Story