காமன்வெல்த் போட்டி; இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்


காமன்வெல்த் போட்டி; இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 10 April 2018 3:26 AM GMT (Updated: 10 April 2018 3:26 AM GMT)

காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியது. #CWG2018

கோல்டு கோஸ்ட்,

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

காமன்வெல்த் போட்டியின் ஆடவர் ஹாக்கி போட்டியில் மலேசிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் ஹார்மன்பிரீத் 3வது மற்றும் 44வது நிமிடங்களில் கோல் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.  மலேசிய அணியில் பைசல் சாரி 16வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார்.
இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இந்திய அணி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.

தனது அட்டவணை வரிசையில் இந்தியா தற்காலிகம் ஆக முதலிடத்தில் உள்ளது.  அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்தியா அதற்கு முன் இங்கிலாந்துடன் ஒரு போட்டியில் விளையாடும்.  அதில் வெற்றி பெறும் அணியே அட்டவணையில் முதல் இடத்தில் இடம்பெறும்.

Next Story