காமன் வெல்த் போட்டி டபுள் டிராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்


காமன் வெல்த் போட்டி டபுள் டிராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
x
தினத்தந்தி 11 April 2018 5:21 AM GMT (Updated: 11 April 2018 5:25 AM GMT)

காமன் வெல்த் போட்டி டபுள் டிராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்து உள்ளது. #CWG2018

கோல்டுகோஸ்ட்

காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்தியா 11 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில்  நீடித்தி வருகிறது. 

இன்று  நடைபெற்ற டபுள் டிராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங்  தங்கம் வென்றார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் தங்கப் பதக்கம் 12 ஆனது.

ஆண்களுக்கான 50 மீ பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஓம்பிரகாஷ் மிதர்வால் 201.1 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதனால் பதங்கங்களின் எண்ணிக்கை 12 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என  23 ஆனது. 

Next Story