சையது மோடி பேட்மிண்டன் போட்டி; சாய்னா மற்றும் சமீர் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்


சையது மோடி பேட்மிண்டன் போட்டி; சாய்னா மற்றும் சமீர் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 24 Nov 2018 3:30 PM GMT (Updated: 24 Nov 2018 3:30 PM GMT)

உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் சையது மோடி சர்வதேச உலக சுற்றுலா பேட்மிண்டன் போட்டியில் சாய்னா மற்றும் சமீர் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள பனார்சீ தாஸ் பேட்மிண்டன் அகாடெமியில் சையது மோடி சர்வதேச உலக சுற்றுலா சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா மற்றும் இந்தோனேசியாவின் டிவி வார்டோயோ விளையாடினர்.  இந்த போட்டியில் 21-13, 17-21, 21-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சமீர் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இதேபோன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இந்தோனேசியாவின் ரசெல்லி ஹர்தவான் விளையாடினர்.  இதில், 12-21, 21-7, 21-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

சமீர், சீனாவின் குவாங்ஜுவையும், சாய்னா, சீனாவின் ஹான் யூஹியுடனும் இறுதி போட்டியில் விளையாடுகின்றனர்.

இதேபோன்று மகளிர் இரட்டையர் பிரிவில் ரஷ்யாவின் எகாடெரீனா மற்றும் அலீனா இணையை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அஷ்வினி பொன்னப்பா மற்றும் என். சிக்கி ரெட்டி இணை இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

Next Story