கேலோ இந்தியா இளைஞர் போட்டிகள் ஒத்தி வைப்பு


கேலோ இந்தியா இளைஞர் போட்டிகள் ஒத்தி வைப்பு
x
தினத்தந்தி 11 Jan 2022 4:28 PM GMT (Updated: 11 Jan 2022 4:28 PM GMT)

கேலோ இந்தியா இளைஞர் போட்டிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.சண்டிகார்,

கேலோ இந்தியா இளைஞர் போட்டிகள் 5 நகரங்களில் நடைபெறும்.  இதில் 10 ஆயிரம் வீரர்கள் வரை கலந்து கொள்வார்கள்.  கடந்த 2020ம் ஆண்டில் அசாமில் போட்டிகள் நடந்தன.

அதன்பின்னர் கடந்த 2021ம் ஆண்டில் நவம்பர்-டிசம்பர் வரையில் போட்டிகள் நடைபெற இருந்தன.  எனினும், 3வது அலை அச்சத்தினால் நடப்பு ஆண்டு பிப்ரவரிக்கு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இதன்படி, பிப்ரவரி 5ந்தேதி முதல் 14ந்தேதி வரை போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.  எனினும், இந்த போட்டிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.  இதனை இந்திய விளையாட்டு கழகம் உறுதி செய்துள்ளது.


Next Story