பெண்களின் ‘பவுன்சர்’ படை


பெண்களின் ‘பவுன்சர்’ படை
x
தினத்தந்தி 30 Dec 2018 3:36 PM IST (Updated: 30 Dec 2018 3:36 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டலில் நடைபெறும் இரவு விருந்து நிகழ்ச்சி களில் பிரச்சினைக்குரிய வகையில் செயல்படுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு ஆண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணிகள் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.

ட்டலில் நடைபெறும் இரவு விருந்து நிகழ்ச்சி களில் பிரச்சினைக்குரிய வகையில் செயல்படுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு ஆண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணிகள் நிறுத்தப்பட்டிருப்பார்கள். அந்த பணியில் பெண்களும் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். இரவு பார்ட்டிகள், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் புனேவில் பெண் பவுன்சர் படை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படையில் இடம்பெற்றிருக்கும் பெண்கள் பகலில் வேறு வேலைகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இரவில் கருப்பு நிற உடை அணிந்து பெண் ‘பவுன்சர்களாக’ மாறிவிடுகிறார்கள்.

இந்த பவுன்சர்களை உருவாக்கியவர் அமிதா கடம். இவருடைய கணவர் லாண்டரி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் மகன் இருக்கிறான். அமிதா திருமணத்திற்கு பிறகு பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்கிறார். படிப்புக்கு ஏற்ற வேலை அமையவில்லை. அவருடைய சகோதரியின் கணவர் பவுன்சராக பணி புரிந்துவந்திருக்கிறார். அவரை பார்த்து பவுன்சர் வேலையில் சேர விரும்பியவர் பெண்களுக்கான பவுன்சர் படையை உருவாக்கிவிட்டார். அதற்கான காரணத்தை விவரிக்கிறார்.

‘‘பெண்களின் பாதுகாப்பு கவலைக்குரியதாக இருக்கிறது. என் தங்கையின் கணவர் செய்யும் வேலையை பார்த்ததும் பெண்கள் ஏன் பவுன்சர்களாக பணி செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அவரிடம் ஆலோசனை பெற்று பெண் பவுன்சர் படையை உருவாக்க முடிவு செய்தேன். முதலில் என் பெற்றோரும், கணவரும் சம்மதிக்கவில்லை. அவர்களிடம் போராடி சம்மதம் பெற்றேன்.

அதன்பிறகு பெண்களை பவுன்சர்களாக பணி புரியவைப்பதிலும் சிக்கல் எழுந்தது. இரவில் நிகழ்ச்சி முடிந்து தாமதமாக வீடு திரும்ப வேண்டியிருந்ததால் முதலில் தயங்கினார்கள். இரண்டு, மூன்று பெண்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட படையில் இப்போது 50 பெண்கள் இருக்கிறார்கள். நாங்கள் பவுன்சர்களுக்கான பணியை மட்டும் செய்வதில்லை. திருமண விழாவில் வரவேற்பாளர்களாகவும், சமையல் பணிக்கு உதவியாகவும் இருக்கிறோம். ஆண் பவுன்சர்களை காட்டிலும் எங்கள் பணி கடினமானதாக இருக்கிறது. பெண்கள் ஒத்துழைப்பு கொடுப்பதால் சிறப்பாக செயல்பட முடிகிறது’’ என்கிறார்.

இந்த படையில் இடம்பிடித்திருக்கும் ரேகா பகலில் வீட்டு வேலை செய்பவர். இவருடைய கணவர் ஆட்டோ டிரைவர். ‘‘என் கணவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. என் வருமானத்தில்தான் குழந்தையின் படிப்பு செலவையும், வீட்டு செலவையும் சமாளிக்கிறேன். வீட்டு வேலைக்கு மட்டும் சென்றுகொண்டிருந்த சமயத்தில் மாதம் 900 ரூபாய் தான் சம்பாதித்தேன். இப்போது பவுன்சர் பணி மூலம் மாதம் மூன்றாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்போதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ தொடங்கி இருக்கிறேன்’’ என்கிறார்.
1 More update

Next Story