சிறப்புக் கட்டுரைகள்

இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு + "||" + In the past week, Infosys shares declined to a record high in the top 10 list

இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு

இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு
சென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு


சென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் 6 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகரித்தது. 4 நிறுவனப் பங்குகளின் மதிப்பு சரிவடைந்தது. இந்தப் பட்டியலில் இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவை சந்தித்தது. அதே சமயம் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு அதிக ஏற்றம் கண்டது.

குறியீட்டு எண்கள்

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 373.17 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 109.35 புள்ளிகள் முன்னேறியது.

அந்த நிலையில், டாப் 10 பட்டியலில் 6 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ஒட்டுமொத்த அளவில் ரூ.98,502 கோடி அதிகரித்தது. அதில் டாட்டா கன்சல்டன்சி நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்சமாக ரூ.49,438 கோடி அதிகரித்து ரூ.8.05 லட்சம் கோடியாக உயர்ந்தது. அடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.25,957 கோடி உயர்ந்து ரூ.8.77 லட்சம் கோடியாக இருந்தது.

எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.6,808 கோடி அதிகரித்து ரூ.6.24 லட்சம் கோடியை எட்டியது. ஐசிஐசிஐ வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.6,740 கோடி உயர்ந்து ரூ.2.61 லட்சம் கோடியாக அதிகரித்தது. கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.5,966 கோடி அதிகரித்து ரூ.2.63 லட்சம் கோடியாக இருந்தது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.3,593 கோடி உயர்ந்து ரூ.3.76 லட்சம் கோடியை எட்டியது.

பாரத ஸ்டேட் வங்கி

கடந்த வாரத்தில், டாப் 10 பட்டியலில் 4 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு சரிவடைந்தது. அதில் இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்சமாக ரூ.13,740 கோடி குறைந்து ரூ.3.13 லட்சம் கோடியாக சரிவடைந்தது. அடுத்து பாரத ஸ்டேட் வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.3,927 கோடி சரிவடைந்து ரூ.2.77 லட்சம் கோடியாக குறைந்தது. எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.3,847 கோடி குறைந்து ரூ.3.45 லட்சம் கோடியாக இருந்தது. ஐ.டி.சி. நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.1,532 கோடி சரிந்து ரூ.3.73 லட்சம் கோடியாக குறைந்தது.