காலர்போன் பிட்னஸ் சேலஞ்ச்


காலர்போன் பிட்னஸ் சேலஞ்ச்
x
தினத்தந்தி 3 May 2019 8:04 AM IST (Updated: 3 May 2019 8:04 AM IST)
t-max-icont-min-icon

மீன்களை நீந்தவிடும் ‘பிட்னஸ் சேலஞ்ச்’ 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது.

சீனாவில், காறை எலும்பு பகுதியில் மீன்களை நீந்தவிடும் ‘பிட்னஸ் சேலஞ்ச்’ 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. இது இன்று சீனாவைத் தாண்டி, பல ஆசிய நாடுகளுக்கும் பரவியிருக்கிறது.

உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்களுக்கு தோள்பட்டையில் உள்ள காறை எலும்புப் பகுதியில் குழி விழுகிறது. இந்தக் குழிக்குள் சிறிது தண்ணீரை ஊற்றி, உயிருடன் இருக்கும் சிறிய மீன்களை நீந்த விடுகிறார்கள். மீன்கள் நன்றாக நீந்தினால் இந்தச் சவாலில் வெற்றி பெற்றதாக அர்த்தம்.

இந்தச் சவாலை வைத்துப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. பிட்னஸ் சேலஞ்சில் வெற்றி பெறும் பெண்களுக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி, பலரையும் சவாலுக்கு இழுக்கிறார்கள்.

1 More update

Next Story