வானவில் : சேம்சனின் யு.எஸ்.பி. மைக்

சேம்சன் நிறுவனம் கோ மிக் என்ற பெயரிலான யு.எஸ்.பி. போர்ட் வசதி கொண்ட மைக்ரோபோனை அறிமுகம் செய்துள்ளது. இதை கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றோடு இணைத்து பயன்படுத்த முடியும்.
கம்ப்யூட்டர் சார்ந்த வீடியோ பதிவுகளை பதிவு செய்பவர்களுக்கு மிகவும் ஏற்றது. இசை பதிவு மற்றும் வீடியோ காட்சிகளுடன் இணைந்த சம்பவங்களை பதிவு செய்து பதிவேற்றம் செய்ய இது மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல வீடியோ மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள இந்த மைக்ரோபோன் உதவியாக இருக்கும். இத்துடன் ஹெட்போனை இணைத்து செயல்படுத்த முடியும்.
இதில் ஒலிப்பதிவானது 20 ஹெர்ட்ஸ் முதல் 18 கிலோ ஹெர்ட்ஸ் வரை இருக்கும். அதேபோல இதில் பேசினால் 44.1 கிலோ ஹெர்ட்ஸ் வரை ஒலி கேட்கும். இதன் விலை ரூ.3,930.
Related Tags :
Next Story






