25 பைசாவை வைத்து வங்கி கணக்கு தொடங்கிய பெண்மணி


ஆர்.என்.பாஸ்கர்
x
ஆர்.என்.பாஸ்கர்
தினத்தந்தி 29 Sept 2019 11:51 AM IST (Updated: 29 Sept 2019 11:51 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் கடைக்கோடி எல்லைகளுக்கும் வங்கி சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில் வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டன.

ஆனால் 1969-ல் முதல் கட்டமாக அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கி, முற்றிலும் கிராமப்புறத்தில் செயல்பட்ட முதல் வங்கியாகும். அதன் டெபாசிட்தாரர்கள் மற்றும் கடன் பெற்றவர்கள் அனைவரும் கிராமப் புறங்களை சேர்ந்தவர்கள் தாம்.

சிண்டிகேட் வங்கியை தொடங்கிய தோன்சே மாதவ் அனந் பாய் கிராமப்புற வங்கி சேவைகளின் முன்னோடி என்று ‘கேம் ஆப் இந்தியா’ என்ற நூலின் ஆசிரியரும், மூத்த பத்திரிக்கையாளருமான ஆர்.என்.பாஸ்கர் கூறுகிறார். அவருடைய புத்தகத்தில், சிண்டிகேட் வங்கி மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்ட வங்கி என்று விவரிக்கிறார்.

டி.எம்.ஏ.பாய் தனது மருத்துவ படிப்பை முடித்தவுடன் ஜப்பான் செல்ல விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவரின் தாயார் அவரது மனதை மாற்றி, அவர்களின் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு சேவை செய்யுமாறு கூறினார். மால்பே ஒரு சராசரியான, தூங்கி வழியும் மீனவ கிராமமாக இருந்தது. ஆண்கள் மீன் பிடிக்க சென்று திரும்பிய பின், மது குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். மீன்களை சுத்தம் செய்து விற்பனை செய்தல், குடும்பத்திற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்குதல், உபரி வருமானத்தை சேமித்தல் ஆகியவை பெண்களின் பணிகளாக இருந்தது.

“இது சரியான வாழ்க்கை முறை அல்ல என்பதை பாய் ஆறு மாதங்களில் உணர்ந்தார். அவர்களை பணக்காரர்களாக மாற்றி, அதே நேரத்தில் தானும் பணக்காரராக வழிமுறையை அவர் கண்டறிந்த தருணம் அது தான்” என்கிறார் பாஸ்கர்.

முதலில் 25 பைசாவை சேமிக்க பெண்களுக்கு கற்றுக்கொடுத்தார். அதை தன்னிடம் கொடுத்து வைக்க செய்து, அவற்றிற்கு மிகத் துல்லியமான கணக்குகளை பராமரித்தார். சில மாதங்களில் ரூ.1,000 வசூலித்தார். பிறகு பசு மாடுகளை வாங்க பெண்களை தூண்டினார். இதை செயல்படுத்த, அவர்களின் தாய்மை உணர்வை தூண்டினார். பாலின் முதல் குவளையை தங்களின் குழந்தைகளுக்கு ஒதுக்க சொன்னார். மீதி உள்ளதை விற்க அறிவுறுத்தினார்.

ஒரு பெண்மணியை இத்திட்டத்தை ஏற்க செய்த பின், இது சுலபமாகியது. பால் உற்பத்தி அதிகரித்த பின், அனைத்து பாலையும் அவரால் கொள்முதல் செய்ய முடியாததால், ஒரு கூட்டுறவு சங்கத்தை தொடங்கினார். தென் இந்தியாவின் முதல் கூட்டுறவு வங்கியான வடக்கு கனரா கூட்டுறவு வங்கியை தொடங்கினார். இதன் முதல் கிளை உடுப்பியில் 1925-ல் தொடங்கப்பட்டது. பிறகு மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தையும், நெசவாளிகள் கூட்டுறவு சங்கத்தையும் தொடங்கினார்.

“தென் இந்திய கூட்டுறவு சங்கங்களின் வரலாறு என்பது குரியனின் வரலாறு அல்ல. டி.எம்.ஏ.பாயின் வரலாறு தான்” என்கிறார் பாஸ்கர்.

சிறிய அளவில் நூல் வணிகராக இருந்த திருபாய் அம்பானி ஒரு வணிகர் லைசென்ஸ் பெற டி.எம்.ஏ.பாய் உதவினார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் பாய் குடும்ப உறுப்பினர் ஒருவர், அவர் காலமாகும் வரை உறுப்பினராக இருந்தார்.
1 More update

Next Story