சைக்கிள் தாத்தா!


சைக்கிள் தாத்தா!
x
தினத்தந்தி 14 Dec 2019 11:29 AM GMT (Updated: 14 Dec 2019 11:29 AM GMT)

ஆஸ்திரேலியாவில் டூவாம்பா நகரத்தில் வசிப்பவர் ஜேம்ஸ் மேக் டொனால்ட். இவர் ஒரு சைக்கிள் பிரியர். சைக்கிள் தாத்தா என்ற பெயரில் அங்கே பிரபலமானவர்.

நூற்றுக்கணக்கான சைக்கிள்களை சேகரித்து வைத்திருக்கிறார். அவற்றை வீடு முழுவதும் அலங்காரப் பொருட் களாக அடுக்கித் தன் வீட்டையே சைக்கிள் வீடாக மாற்றியிருக்கிறார். ஹால், கிச்சன், பெட்ரூம், பாத்ரூம் வரை எல்லா இடத்திலும் சைக்கிள்கள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

ஒரு நாளைக்கு ஒரு சைக்கிள் என எடுத்துக்கொண்டு ஏரியா முழுக்க ஜாலி ரவுண்ட் வருகிறார். சில ஹாலிவுட் படங்களிலும் இவருடைய சைக்கிள்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். தற்போது இவருடைய வீடு சைக்கிள் அருங்காட்சியகமாக மாறி இருக்கிறது. டூவாம்பா நகருக்கு தினந்தோறும் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த சைக்கிள் அருங்காட்சியகத்தை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கிறார்கள். ‘தி ஸ்போக்ஸ் மேன்’ என்ற பெயரில் இவரைப்பற்றி ஆவணப் படம் வந்திருக்கிறது.

‘என்னுடைய வாழ்க்கையில் பாதிநாட்கள் அரியவகை சைக்கிள்களை சேகரிப்பதிலேயே செலவிட்டிருக்கிறேன். இன்னும் தொடர்ந்து சேகரிப்பேன்’ என்று தெம்பாகச் சொல்கிறார் இந்த தாத்தா. 1890-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சைக்கிள்களில் இருந்து லேட்டஸ்ட் மாடல் வரை எல்லா கலெக்‌ஷனும் வைத்திருக்கிறார். யாராவது விருப்பப்பட்டு இவற்றை வாங்க விரும்பினால் விலைக்குக் கொடுக்கவும் செய்கிறார். சைக்கிள் வாங்கிய செலவை விட அதைப் பராமரிக்க அதிகச் செலவு செய்துவிட்டாராம். ‘சைக்கிள் எவ்வளவு பழசாக இருந்தாலும் என்னுடைய கைபட்டால் பளபளன்னு மின்னும்’ என்கிறார் இந்த சைக்கிள் தாத்தா!

Next Story