பாக்குமட்டையில் உருவான பாரதி ஓவியம்


பாக்குமட்டை தட்டில் பலவண்ணங்களில் படைக்கப்பட்ட பாரதியார்; குடும்பத்தினருடன் மாணவி சம்ஹிதா
x
பாக்குமட்டை தட்டில் பலவண்ணங்களில் படைக்கப்பட்ட பாரதியார்; குடும்பத்தினருடன் மாணவி சம்ஹிதா
தினத்தந்தி 22 Dec 2019 2:09 PM IST (Updated: 22 Dec 2019 2:09 PM IST)
t-max-icont-min-icon

பெண்களின் விடுதலைக்கு வித்திட்டவர் மகாகவி பாரதி. அத்தகைய பாரதிக்கு புகழ் சேர்க்கும் வகையில் நெல்லையை சேர்ந்த மாணவி சம்ஹிதா, பாரதியின் உருவத்தை பல்வேறு விதங்களில் ஓவியங்களாக வரைந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை மகாராஜ நகரை சேர்ந்த டாக்டர் தம்பதி கண்ணன்-மீனாட்சி சுந்தரி. இவர்கள் இருவரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்களாக பணி புரிந்து வருகின்றனர். அவர்களுடைய மகள்தான் சம்ஹிதா. இவர் தியாகராஜ நகர் புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கும் சம்ஹிதா மாநில அளவிலும், தேசிய அளவிலும் கல்வியில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். அதோடு ஓவியத்திலும் புதுமைகளை படைத்து வருகிறார். சமீபத்தில் பாரதியாரின் 138-வது பிறந்த நாளையொட்டி 23 மணி நேரம் தொடர்ந்து ஓவியம் வரையும் சாதனையில் ஈடுபட்டார். பாக்குமட்டையில் தயாரிக்கப்பட்ட சாப்பாடு தட்டுகளில் பாரதியாரின் உருவத்தை ஓவியமாக்கினார். 138 தட்டுகளில் பாரதியின் ஓவியத்தை வரைந்தது மட்டுமல்லாமல் அந்த தட்டுகளில் பாரதி உதிர்த்த வீர வரிகளையும் எழுதி உள்ளார். அவற்றை பாரதிக்கு சமர்ப்பணம் செய்தார். இந்த பாக்குமட்டைத் தட்டு ஓவியங்களை தான் படிக்கும் பள்ளியின் வரவேற்பறை பகுதியில் காட்சிப்படுத்தியிருக் கிறார். இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக எட்டயபுரத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், சம்ஹிதாவுக்கு பரிசு வழங்கி பாராட்டி உற்சாகப்படுத்தி உள்ளார்.

சம்ஹிதாவின் வீட்டில் அவர் வாங்கி குவித்த பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்களும், அவர் வரைந்த ஓவியங்களும் பளிச்சிடுகின்றன. குழந்தை கண்ணன் ஓவியங்கள் ‘3-டி’யில் வித்தியாசமாக தோன்று கின்றன. இசையிலும் சம்ஹிதா மிகுந்த ஆர்வம்கொண்டவராக இருக்கிறார்.

தனது ஓவிய சாதனை பற்றி மாணவி சம்ஹிதா கூறுகையில், ‘‘பாரதியின் வரிகள் எப்போதும் எனக்குள் நினைவில் இருக்கும். அவரது புரட்சிகரமான கருத்து கள் நாட்டின் விடுதலைக்கு பேருதவியாக இருந்துள்ளன. பாரதியின் பிறந்த நாளில் அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில், நான் கற்றுக்கொண்ட ஓவியத்தின் மூலம் ஓவிய படைப்புகளை உருவாக்கினேன். அதுவும் பிளாஸ்டிக் ஒழிப்பில் அரசு வேகமாக செயல்பட்டு வரும் இந்த நேரத்தில் பாக்கு மட்டை தட்டுகளை இதற்காக தேர்வு செய்தேன். இது பாரதியின் ஓவிய படைப்புடன், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செய்யப்பட்டது. இதற்கு என்னுடைய பெற்றோரும், ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தனர்’’ என்றார்.

சம்ஹிதாவுக்கு ஓவிய பயிற்சி அளிக்கும் ஆசிரியர் கணேசன் கூறுகையில், ‘‘சம்ஹிதா சிறுவயது முதல் எங்களது கலைக்கூடத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். ஓவியத்தில் முதலில் ‘பென்சில் சேடிங்’ பயிற்சி அளிக்கப்படும். அந்த பயிற்சியிலே சம்ஹிதா மிக அருமையாக ஓவியம் தீட்டினார். அதை தொடர்ந்து கிரையான்ஸ், வாட்டர் கலர், போஸ்டர் கலர், பேப்ரிக், அக்ரலிக் ஆகிய ஓவிய பொருட்களை கொண்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. தற்போது ஆயில் பெயிண்டிங்கில் ஓவியங்களை உருவாக்கு கிறார். குறிப்பாக முப்பரிமாண ஓவியத்தில் சம்ஹிதாவின் ஓவியங்கள் தத்ரூபமாக உள்ளது’’ என்றார். சம்ஹிதா படிப் பிலும் பல்வேறு சாதனைகளை படைத் திருப்பதாக அவரது பள்ளி முதல்வர் காட்வின் எஸ்.லாமுவேல் தெரிவித்தார்.
1 More update

Next Story