வானவில் : கேனன் மார்க் 3 டி.எஸ்.எல்.ஆர். கேமரா

கேனன் தயாரிப்புகளில் உயர் தரத்திலான டி.எஸ்.எல்.ஆர். மாடலில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் மார்க் 3 கேமராவை கேனன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திஉள்ளது.
ஆக்ஷன் காட்சிகளையும், விளையாட்டு நிகழ்ச்சிகளையும், வன விலங்கு களை படமெடுக்கவும் இது மிகவும் சரியான தேர்வாக இருக்கும். இதில் 20.1 மெகா பிக்ஸெல் சென்சார் உள்ளது. இதில் டியூயல் பிக்ஸெல் ஆட்டோ போகஸ் சிஸ்டம் உள்ளது. மொத்தம் 191 ஆட்டோ போகஸ் புள்ளிகள் உள்ளன.
இதனால் படமெடுப்பது மிகவும் எளிதாகிறது. அத்துடன் 3,869 தேர்வு செய்யப்பட்ட ஆட்டோ போகஸ் பொசிஷன்களும் இதில் உள்ளன. கண், முகம், தலை உள்ளிட்டவற்றை தானியங்கி முறையில் போகஸ் செய்து படம் எடுத்துவிடும். இதில் டிஜிக் எக்ஸ் பிராசஸர் உள்ளது. மிக விரைவாக படமெடுக்கும் கேமராக்களில் இதுவும் ஒன்றாகும்.
இதன் மேல் பாகம் மெக்னீசியம் அலாய் உலோகத்தால் ஆனது. இது தூசி மற்றும் ஈரப்பதத்தை தாக்குப் பிடிக்கும் தன்மையும் கொண்டது. இதில் 3.2 அங்குல எல்.சி.டி. டிஸ்பிளே வசதி உள்ளது.
இதில் உள்ள ரீசார்ஜபிள் பேட்டரி மூலம் 2,850 புகைப்படங்களை எடுக்க முடியும். வை-பை, புளூடூத், ஜி.பி.எஸ்., கிகாபிட் எதர்நெட் போர்ட் வசதி, யு.எஸ்.பி. 3.2 மற்றும் யு.எஸ்.பி. சி போர்ட் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.5.76 லட்சமாகும். இந்த கேமராவுடன் ஏ 512 ஜி.பி. எக்ஸ்பிரஸ் கார்டு மற்றும் கார்டு ரீடர் ஆகியவற்றையும் இந்நிறுவனம் அளிக்கிறது.
Related Tags :
Next Story






