மான்ட் கார்லோ நிறுவனம் பங்கு வெளியிட செபி அனுமதி


மான்ட் கார்லோ நிறுவனம் பங்கு வெளியிட செபி அனுமதி
x
தினத்தந்தி 8 Feb 2020 4:11 PM IST (Updated: 8 Feb 2020 4:11 PM IST)
t-max-icont-min-icon

அகமதாபாத்தைச் சேர்ந்த மான்ட் கார்லோ நிறுவனம் கட்டுமானத் துறையில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

ட்டுமானத் துறையைச் சேர்ந்த மான்ட் கார்லோ நிறுவனம் பங்கு வெளியிட பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி அளித்துள்ளது.

கட்டுமானத் துறை

அகமதாபாத்தைச் சேர்ந்த மான்ட் கார்லோ நிறுவனம் கட்டுமானத் துறையில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான துறையில் (இ.பி.சி) இந்நிறுவனம் இதுவரை பல திட்டங்களை நிறைவு செய்திருக்கிறது.

புதிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஆர்டர்கள் வந்த நிலையில், மான்ட் கார்லோ நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டும் வகையில் புதிய பங்குகள் வெளியிட்டு நிதி திரட்ட உத்தேசித்தது.

எனவே, 2018-ஆம் ஆண்டு மே மாதத்தில் அதற்கு அனுமதி கேட்டு செபி அமைப்புக்கு விண்ணப்பித்தது. செபியும் அந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அனுமதி அளித்தது. விதிமுறைகளின்படி அனுமதி பெற்று ஓராண்டுக்குள் ஒரு நிறுவனம் பங்கு வெளியிட வேண்டும். ஆனால் சந்தை நிலவரங்கள் சரியில்லாததால் மான்ட் கார்லோ பங்கு வெளியிடவில்லை. 2019 ஆகஸ்டு மாதத்துடன் செபி அனுமதி காலாவதியான நிலையில் இந்நிறுவனம் சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீண்டும் விண்ணப்பித்தது. அதற்கு இப்போது அனுமதி கிடைத்துள்ளது.

இந்நிறுவனம் தனது வெளியீட்டில் ரூ.450 கோடி மதிப்பிற்கான புதிய பங்குகளை வெளியிட உள்ளது. மேலும் பங்குதாரர்களின் 30 லட்சம் பழைய பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் இந்நிறுவனம் ரூ.550 கோடி திரட்ட உத்தேசித்துள்ளது. பங்கு வெளியீடு மூலம் திரட்டும் நிதியை கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்தல், நடைமுறை மூலதன தேவைகள் மற்றும் இதர பொது நோக்கங்களுக்குப் பயன்படுத்தப் போவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளியீடு நிர்வாகம்

மான்ட் கார்லோவின் புதிய பங்கு வெளியீட்டை ஈடல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ், ஆக்சிஸ் கேப்பிட்டல் மற்றும் எச்.டீ.எப்.சி. பேங்க் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. வெளியீட்டுக்குப் பின் இந்நிறுவனத்தின் புதிய பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.
1 More update

Next Story