சிறப்புக் கட்டுரைகள்

நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்யூனியன் பேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் ரூ.575 கோடி + "||" + Union Bank of India Net profit is Rs.575 crore

நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்யூனியன் பேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் ரூ.575 கோடி

நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்யூனியன் பேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் ரூ.575 கோடி
பொதுத்துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆப் இந்தியா, நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.575 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது.
பொதுத்துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆப் இந்தியா, நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.575 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் இவ்வங்கிக்கு ரூ.1,194 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது.

இதே காலத்தில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் 26 சதவீதம் அதிகரித்து (ரூ.2,493 கோடியில் இருந்து) ரூ.3,134 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது (2019 ஜூலை-செப்டம்பர்) மொத்த வாராக்கடன் (15.24 சதவீதத்தில் இருந்து) 14.86 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும் நிகர வாராக்கடன் (6.98 சதவீதத்தில் இருந்து) 6.99 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது யூனியன் பேங்க் ஆப் இந்தியா பங்கு ரூ.51.25-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.51.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.49.30-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.49.75-ல் நிலைகொண்டது. இது, திங்கள்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 2.36 சதவீத சரிவாகும்.