சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: நவீனப்படுத்தப்பட்ட ஹூண்டாய் டக்ஸன் + "||" + The modernized Hyundai Tucson

வானவில்: நவீனப்படுத்தப்பட்ட ஹூண்டாய் டக்ஸன்

வானவில்: நவீனப்படுத்தப்பட்ட ஹூண்டாய் டக்ஸன்
சர்வதேச ஆட்டோ மொபைல் கண்காட்சியில் ஹூண்டாய் நிறுவனம் தனது பிரபலமான டக்ஸன் மாடலில் மேம்படுத்தப்பட்ட ரகத்தை அறிமுகப்படுத்திஉள்ளது.
டெல்லியை அடுத்த நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ மொபைல் கண்காட்சியில் ஹூண்டாய் நிறுவனம் தனது பிரபலமான டக்ஸன் மாடலில் மேம்படுத்தப்பட்ட ரகத்தை அறிமுகப்படுத்திஉள்ளது. இது பாரத் புகைவிதி 6-க்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வேரியன்ட்கள் ஜி.எல். மற்றும் ஜி.எல்.எஸ். என்ற பெயரில் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியிலான விற்பனை மார்ச் மாதம் தொடங்கும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தக் காரின் தனிப்பெரும் அடையாளமான பெரிய அளவிலான கிரில் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட பம்பர், எல்.இ.டி. முகப்பு விளக்கு, அலாய் சக்கரங்கள் ஆகியவற்றுடன் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உள்புறத்தில் டேஷ்போர்டில் மிகப் பெருமளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 8 அங்குல தொடு திரை, புதிய ஏ.சி. வென்ட் உள்ளிட்டவை பெரும் மாற்றங்களாகும். 5 பேர் பயணிக்கும் வகையில் பின் வரிசையில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் இருக்கைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் பெட்ரோல் மாடல் 150 ஹெச்.பி. திறன் மற்றும் 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் 2 லிட்டர் என்ஜினைக் கொண்டதாக வந்துள்ளது. டீசல் என்ஜின் 182 ஹெச்.பி. மற்றும் 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இரண்டு வேரியன்ட்டிலுமே ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. டீசல் வேரியன்ட் 8 கியர்களைக் கொண்டது.

இதில் டயர் காற்று அழுத்தத்தை அளவிடும் வசதி, எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், பயணிகளுக்கும் பவர் சீட், புளூ லிங்க் இணைப்பு மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. மேற்கூரை திறந்து மூடும் வசதி கொண்டது. பிரீமியம் எஸ்.யு.வி.யை ஓட்டும் அனுபவம் நிச்சயம் கிடைக்கும். பாதுகாப்புக்கு இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. இந்த மாடல் ஜீப் கம்பாஸ் மற்றும் ஹோண்டா சி.ஆர்.வி. மாடல் காருக்குப் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த காருக்கு 5 ஆண்டு உத்தரவாதத்தையும் இந்நிறுவனம் அளிக்கிறது.