ஊரக வளர்ச்சித் துறையில் ஏராளமான பணிகள்


ஊரக வளர்ச்சித் துறையில் ஏராளமான பணிகள்
x
தினத்தந்தி 17 Feb 2020 6:41 AM GMT (Updated: 17 Feb 2020 6:41 AM GMT)

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பல்வேறு மாவட்டங்களில் சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 292 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மாவட்டம் வாரியான பணியிடங்கள் : மதுரை - 17, ராமநாத புரம் - 13, விருதுநகர் - 20, வேலூர் - 18, திருநெல்வேலி - 24, திருச்சி - 16, திண்டுக்கல் - 26, ஈரோடு - 19, புதுக்கோட்டை - 7, அரியலூர்- 6, தூத்துக்குடி- 23, கிருஷ்ணகிரி - 10, திருவண்ணாமலை -11, திருப்பூர் - 12, திருவள்ளூர் - 7, தேனி - 14, சேலம் -6, திருவாரூர் - 8, கடலூர் - 20.

சிவில் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 2020-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இனசுழற்சி முறையை பின்பற்றி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றுடன், விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப் படிவத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாங்கலாம்.

குறிப்பிட்ட இணையதளங்களிலும் கிடைக்கும். ஒவ்வொரு மாவட்ட பணிகளுக்கும் குறிப்பிட்ட தேதிகளுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். நேரிலும் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு) வசமும் விண்ணப்பத்தை வழங்கலாம்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ncs.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

அந்தந்த மாவட்ட இணையதளத்திலும் பார்க்கலாம். உதாரணமாக தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள்
www.thoothukudi.nic.in
என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அந்தந்த மாவட்டத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய நாளின் விவரத்தையும் இணையதளத்தில் அறியலாம். நீண்ட அவகாசமாக மதுரையில் பிப்ரவரி 28-ந்தேதி வரை விண்ணப்பம் பெறப்படுகிறது.

Next Story