டிசம்பர் காலாண்டில் அதானி டிரான்ஸ்மிஷன் லாபம் 32% அதிகரிப்பு

அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம், டிசம்பர் காலாண்டில் ரூ.203 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது.
புதுடெல்லி
அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம், டிசம்பர் காலாண்டில் ரூ.203 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.153 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,835 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.2,834 கோடியாக இருந்தது. மொத்த செலவினம் (ரூ.2,656 கோடியில் இருந்து) ரூ.2,477 கோடியாக குறைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனப் பங்கு ரூ.304-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.313.75-க்கும், குறைந்தபட்சமாக ரூ.304-க்கும் சென்றது. இறுதியில் இப்பங்கு ரூ.309.05-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 2.61 சதவீதம் உயர்வாகும்.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
Related Tags :
Next Story






