டிசம்பர் காலாண்டில் லுப்பின் இழப்பு ரூ.835 கோடி

மருத்துவ துறையை சேர்ந்த லுப்பின் நிறுவனம், டிசம்பர் காலாண்டில் (2019) ரூ.835 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டு இருக்கிறது.
மும்பை
மருத்துவ துறையை சேர்ந்த லுப்பின் நிறுவனம், டிசம்பர் காலாண்டில் (2019) ரூ.835 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டு இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.151 கோடியை இருந்தது. ஆக, இழப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 2.75 சதவீதம் சரிவடைந்து (ரூ.3,821 கோடியில் இருந்து) ரூ.3,716 கோடியாக குறைந்து இருக் கிறது.
மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது லுப்பின் நிறுவனப் பங்கு ரூ.669.90-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.671.40-க்கும், குறைந்தபட்சமாக ரூ.655-க்கும் சென்றது. இறுதியில் இப்பங்கு ரூ.662.65-ல் நிலைகொண்டது. இது, கடந்த புதன்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 1.01 சதவீதம் சரிவாகும்.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
Related Tags :
Next Story






