வானவில் : குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கடிகாரம் 360


வானவில் : குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கடிகாரம் 360
x
தினத்தந்தி 11 March 2020 10:56 AM GMT (Updated: 11 March 2020 10:56 AM GMT)

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 360 நிறுவனம் தற்போது குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது. இது எஸ்.இ 5.பிளஸ் என்ற பெயரில் வந்துள்ளது.

4 ஜி.பி. மற்றும் 2 ஜி.பி. அலைக்கற்றை இணைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் மூலம் இதனை செயல்படுத்த முடியும். சதுர வடிவில் இது உருவாக்கப் பட்டுள்ளது. இதில் பிட்னெஸ் டிராக்கர், முன்புற கேமரா, நீர்புகா தன்மை உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.

குழந்தைகள் இந்த கடிகாரத்தை அணிந்து கொண்டால், பெற்றோர்கள் குழந்தைகள் இருக்குமிடத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டும் குழந்தைகள் இருக்கலாம் என்பதை வரையறுத்துவிட்டால், அந்த பகுதியை விட்டு வெளியேறும்போது அது குறித்த எச்சரிக்கை அலெர்ட் பெற்றோர்களுக்கு ஸ்மார்ட்போனில் வந்துவிடும். இதில் கியூ.ஆர். கோட் வசதி உள்ளதால் அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். பெற்றோர்கள் அளிக்கும் பாக்கெட் மணியையும் இதில் லோட் செய்ய முடியும்.

சிறு வயதிலேயே தேவையான பொருட்களை மட்டுமே வாங்கும் பழக்கத்தையும், ரொக்க பணமின்றி பரிவர்த்தனை செய்யவும் இதன் மூலம் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். இதன் விலை சுமார் ரூ.2,500 முதல் ஆரம்பமாகிறது.

Next Story