நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பி.ஐ. இண்டஸ்ட்ரீஸ் லாபம் 12% வளர்ச்சி


நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பி.ஐ. இண்டஸ்ட்ரீஸ் லாபம் 12% வளர்ச்சி
x
தினத்தந்தி 11 March 2020 4:33 PM IST (Updated: 11 March 2020 4:33 PM IST)
t-max-icont-min-icon

மும்பை பங்குச்சந்தையில், கடந்த திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது பி.ஐ. இண்டஸ்ட்ரீஸ் பங்கு ரூ.1,570-க்கு கைமாறியது.

மும்பை

பி.ஐ. இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.121 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 12 சதவீத வளர்ச்சியாகும்.

இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 20 சதவீதம் உயர்ந்து ரூ.850 கோடியாக உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 22 சதவீதம் அதிகரித்து (ரூ.139 கோடியில் இருந்து) ரூ.170 கோடியாக அதிகரித்து இருக்கிறது. ஒட்டுமொத்த லாபம் 25 சதவீதம் வளர்ச்சி கண்டு (ரூ.149 கோடியில் இருந்து) ரூ.186 கோடியாக உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், கடந்த திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது பி.ஐ. இண்டஸ்ட்ரீஸ் பங்கு ரூ.1,570-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக ரூ.1,497-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.1,516.50-ல் நிலைகொண்டது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
1 More update

Next Story