பங்குச்சந்தை துளிகள் : பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு


பங்குச்சந்தை துளிகள் : பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு
x
தினத்தந்தி 12 March 2020 10:37 AM GMT (Updated: 2020-03-12T16:07:37+05:30)

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்குகளில் முதலீடு செய்யலாம் என சிட்டி குரூப் நிறுவனம் பரிந்துரை செய்கிறது.

* டாட்டா மோட்டார்ஸ் பங்குகளை வாங்கலாம் என மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கூறி உள்ளது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.178-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை 6.43 சதவீதம் வீழ்ந்து ரூ.99-ஆக இருந்தது.

* சன் பார்மாசூட்டிக்கல்ஸ் பங்கு பற்றிய மதிப்பீட்டை ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் உயர்த்தி உள்ளது. முதலில் களை வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம் என தெரிவித்து இருந்த இந்நிறுவனம் இப்போது வாங்கலாம் என பரிந்துரை செய்து பங்கிற்கான எதிர்கால இலக்கை (ரூ.445-ல் இருந்து) ரூ.478-ஆக அதிகரித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.386.30-ல் முடிவுற்றது. திங்கள்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 2.19 சதவீத சரிவாகும்.

* மேக்ஸ் பைனான்சியல் சர்வீசஸ் பங்குகளை வாங்கலாம் என கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் இதற்கான எதிர்கால இலக்கை ரூ.550-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.501.60-ஆக இருந்தது. திங்கள்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.17 சதவீத முன்னேற்றமாகும்.

* பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்குகளில் முதலீடு செய்யலாம் என சிட்டி குரூப் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. எனினும் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரூ.550-ல் இருந்து) ரூ.525-ஆக குறைத்து இருக்கிறது. மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் இந்தப் பங்கு விலை 4.51 சதவீதம் சரிவடைந்து ரூ.404.70-ஆக இருந்தது.

* என்.டி.பி.சி. பங்குகளில் அதிக அளவு முதலீடு செய்யலாம் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.152-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், புதன்கிழமை வர்த்தகத்தில் இந்தப் பங்கின் விலை 0.05 சதவீதம் குறைந்து ரூ.102.80-ல் முடிவுற்றது.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Next Story