உடலை தொடாமலே கண்டறியும் தெர்மல் இமேஜிங் முறை எப்படி செயல்படுகிறது?

தெர்மல் இமேஜிங் என கூறப்படும் தொழில்நுட்பத்தில்தான் கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் அளவீடு செய்யப்படுகின்றன. அதாவது இன்பெரா ரெட் எனப்படும் அகச்சிவப்பு கதிர்களை மனிதர்களின் தோல் மீது பரவவிடும்போது தோலில் ஊடுருவி உடலின் வெப்ப நிலையை திரையில் காட்டும் தொழில்நுட்பமாகும்.
சில கருவிகள் வெப்பநிலை அளவை காட்டுகின்றன. சில கருவிகள் தொற்று குறித்த சமிக்ஞைகளை காட்டுகின்றன.
அகச்சிவப்பு கதிர்களுக்குள் செல்லும்போது உடல் குளிர்ந்த வெப்பநிலையில் இருந்தால் திரையில் நீலம், கத்தரி நிறம் மற்றும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இது ஹைபோதெர்மியா எனப்படுகிறது.
வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சல், புற்றுநோய் வலி, அடிபட்ட காயங்கள் இருந்தால் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காட்டி கொடுத்து விடும். இது ஹைப்பர்தெர்மியா எனப்படுகிறது. இதற்கு பயன்படும் தெர்மல் ஸ்கிரீனிங் கருவிகளில் கேமரா உள்ளது. இதில் படமானது தெர்மல் இமேஜ் அதாவது நெகட்டிவ் போன்று காட்சியளிக்கும். இந்த கருவிகளைத்தான் விமான நிலையங்களில் வைத்து பயணிகளை கண் காணித்து வருகிறார்கள். எனவே இதனால் பயணிகளை அமரவைத்து அவர்களை தொட்டு பார்த்து சோதனை செய்ய தேவையில்லை. என்றாலும் இது முதற்கட்ட சோதனைதான். உடல் வெப்பநிலை அதிகரித்திருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு பிறகு அவர்களுக்கு எந்த மாதிரியான தொற்று உள்ளது? என்பது உறுதி செய்யப்படும்.
புதிது புதிதாக வைரஸ்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை முற்றிலும் ஒழிக்க மருந்துகள் கண்டுபிடிப்பது இன்றும் மருத்துவ தொழில்நுட்பத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.
Related Tags :
Next Story






