சாம்சங் கேலக்ஸி எம் 02

சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி சீரிஸ் மிகவும் பிரபலமானது. இதில் தற்போது எம் 02 மாடல் அறிமுகமாகியுள்ளது.
இதன் விலை சுமார் ரூ.6,999. இதில் 6.5 அங்குல ஹெச்.டி. எல்.சி.டி. டிஸ்பிளே திரை உள்ளது. 1.5 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் உள்ளது. 2 ஜி.பி. மற்றும் 3 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. நினைவகம் கொண்டவையாக இவை வந்துள்ளன. இதனை 1 டெராபைட் வரை விரிவாக்கம் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது.
இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. 13 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமும், முன்பகுதியில் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன. புளூடூத் இணைப்பு வசதியுடன் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஜி.பி. ரேம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.7,499.
Related Tags :
Next Story






