மொபைல் தொழில்நுட்பம்


மொபைல் தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 8 July 2021 5:55 AM GMT (Updated: 8 July 2021 5:55 AM GMT)

நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் 2 வகையான தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. ஒன்று ஜி.எஸ்.எம். தொழில் நுட்பம், மற்றொன்று சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம். இதில் ஜி.எஸ்.எம். என்றால் ‘குளோபல் சிஸ்டம் பார் மொபைல்' என்றும், சி.டி.எம்.ஏ. என்றால் 'கோட் டிவிஷன் மல்டிபிள் அக்சஸ்' என்றும் அர்த்தம்.

உலகம் முழுவதும் பரவலாக இருப்பது ஜி.எஸ்.எம். என்ற தொழில் நுட்பம்தான். இது ஐரோப்பிய நாடுகளின் கண்டுபிடிப்பு. சி.டி.எம்.ஏ. என்பது அமெரிக்க தொழில் நுட்பம். இதை முதன் முதலில் ராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தினார்கள். 1980-க்கு பின் பொது உபயோகத்திற்கு கொண்டு வந்தார்கள்.சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தை விட பல வகைகளில் சிறந்தது. இந்த தொழில் நுட்பத்தில் குரல் தரம் கூடும். இரைச்சல் கொஞ்சமும் இருக்காது. வாடிக்கையாளர் பயணம் செய்து கொண்டே மொபைலில் பேசினாலும், சிக்னல் ஒரு டவரில் இருந்து மற்றொரு டவருக்கு மாறினாலும் அழைப்பு துண்டிக்கப்படாது. வலிமையான சிக்னல் என்பதால் தொடர் பயணத்திலும் தெளிவாக இருக்கும்.

ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தை விட இந்த தொழில்நுட்பத்தில் சிக்னல்கள் அதிக தூரம் வரை சென்றடையும். ஒரு பெரிய நகரம் முழுவதற்கும் 40 டவர்கள் இருந்தால் போதும். அதுவே ஜி.எஸ்.எம். என்றால் 200 டவர்கள் வரை அமைக்க வேண்டும். இதனால் சி.டி.எம்.ஏ. செலவு குறைவு.கட்டிடங்களில் சாதாரண சிக்னல்கள் ஊடுருவி செல்வது கடினம். சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில் ஊடுருவி செல்லும். இதற்கு குறைந்த மின் சக்தியே போதும். அதனால், பேட்டரி அதிக நாட்களுக்கு வரும். சிறிய பேட்டரி போதும். அதனால், மொபைல் சிறியதாகவும் எடை குறைவாகவும் வடிவமைக்க முடியும். சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் ‘சிம் கார்டு' கிடையாது. மொபைலின் உட்புறமே எண் பொறிக்கப்பட்டு விடுகிறது. இதனால் எண்களை மாற்ற முடியாது. இந்த குறைபாடு காரணமாகவே ஒரு நல்ல தொழில்நுட்பம் இங்கு பிரபலமாக முடியாமல் போய்விட்டது.

Next Story