டெல் வெப் கேமரா

கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டெல் நிறு வனம் வெப் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
இது 4-கே ரெசல்யூஷனைக் கொண்டது. இதனால் வீடியோ கான்பரன்ஸ் உள்ளிட்டவைகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும். அதேபோல நகரும் காட்சிகளையும் இது துல்லியமாக பதிவு செய்யும். இதன் விலை சுமார் ரூ.18,999.
இந்த கேமராவில் சோனி ஸ்டார்விஸ் 8.3 மெகா பிக்ஸெல் சென்சார் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது 4-கே அல்ட்ரா ஹெச்.டி. ரெசல்யூஷனில் காட்சிகளை பதிவு செய்ய உதவுகிறது.
மேலும் குறைவான வெளிச்சத் திலும் காட்சிகள் துல்லியமாக பதிவாகும். இதில் சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நாய்ஸ் தொழில்நுட்பம் உள்ளது. இதை வசதியாக வைக்கும் விதமாக டிரைபாட் அடாப்டர் அளிக்கப்படுகிறது. இதனால் லேப்டாப் மீது கூட இதை நிறுவ முடியும். மேலும் திரையின் முன்பு வேலை செய்யாத சூழலில் இது தானாகவே அணைந்து விடும்.
Related Tags :
Next Story






