விளைநிலத்தில் புதைந்திருக்கும் கற்களை பிரித்தெடுக்கும் கருவி


விளைநிலத்தில் புதைந்திருக்கும் கற்களை பிரித்தெடுக்கும் கருவி
x
தினத்தந்தி 29 Aug 2021 9:13 PM IST (Updated: 29 Aug 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

தரிசு நிலத்தைச் சமன்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ற பண்பட்ட நிலமாக மாற்றும் குறைந்த விலையிலான இயந்திரத்தை தெலுங்கானாவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி தீபக் கண்டுபிடித்துள்ளார். இந்தப் புதிய இயந்திரத்தைப் பயன்படுத்தி பாறையைப் பெயர்த்து நிலத்தைச் சமப்படுத்துவதுடன், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் வேர் தொடர்புடைய பிற காய்கறிகளையும் அறுவடை செய்யலாம்.

‘‘2016-ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்ததும், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமமான போரஞ்சாவுக்கு திரும்பினேன். என் சிறு வயதிலிருந்தே குறிப்பிட்ட விவசாய நிலம் பயிரிடப்படாமல் வீணாகிக் கிடப்பதைப் பார்த்தேன். அங்கு சென்று ஆய்வு செய்தபோது, இதேபோல ஏறத்தாழ 100 ஏக்கர் நிலம் தரிசாகக் கிடந்ததை தெரிந்து கொண்டேன்.அங்குள்ள விவசாயிகளிடம் அதுபற்றி கேட்டேன். அந்த நிலத்தின் அடியில் பாறை இருப்பதால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.அந்தப் பாறைகளை எல்லாம் அகற்ற அதிக செலவாகும். விவசாயிகளால் அந்த அளவுக்கு செலவு செய்ய முடியாது. அதேபோல நிலப்பரப்பில் 60 சதவீதம் பாறையாக இருந்ததால், அதனை அகற்றுவதற்கு பல ஆண்டுகளாகும். அந்தளவிற்கு அவர்களுக்கு பொறுமையும் கிடையாது என்பதைத் தெரிந்துகொண்டேன்.இங்குமட்டுமின்றி, இதேபோல மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பயன்படுத்தப்படாத நிலங்கள் நிறைய உள்ளன. இந்தப் பிரச்சினைக்கு உலக நாடுகளில் நவீன இயந்திரங்களைக் கொண்டு தீர்வுகளைக் காண்கிறார்கள். அதை முயற்சிக்கலாம் என்றால், அந்த இயந்திரங்களை வாங்க அதிக செலவாகும். அதனால் அத்தகைய இயந்திரங்களை நானே தயாரித்து விட்டேன். இது நிலத்திற்கு அடியில் இருக்கும் பாறைகளை அகற்றும். அதேசமயம் மண்ணிற்குள் வளரும் கிழங்கு வகைகளையும் அறுவடை செய்யும்.இந்த இயந்திரம் இந்திய விவசாயிகளுக்கு ஏற்றது. இயக்குவதற்கு எளிமையான இதன் விலையும் குறைவுதான். டிராக்டருடன் இணைத்து இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். இந்த இயந்திரத்தின் கீழே பொருத்தப்பட்டுள்ள பிளேடு, மண்ணுக்குள் உள்ள பாறைகளை அகற்றும் திறன்கொண்டது. கற்களையும் மண்ணையும் தனித்தனியாகப் பிரித்து, கற்களை இயந்திரத்துக்குள்ளும் மண்ணை அப்படியே விட்டுவிடும் வகையில் வடிவமைத்துள்ளேன்.

ஒரு ஏக்கரில் உள்ள பாறைகளை இந்த இயந்திரம் மூலம் 4 மணி நேரத்தில் அகற்றிவிடமுடியும். இதற்கு ஓர் ஏக்கருக்கு ரூ.1,500 தான் செலவாகும். ‘ரிஸ்க்’ எடுப்பது கடினமாகவே இருந்தது. வணிகரீதியான ஆதாயங்களுக்காக இந்த இயந்திரத்தை உருவாக்கவில்லை.விவசாயிகளுக்கு உதவுவதே எனது நோக்கம். நமது அறிவு பிறருக்குப் பயன்படும்போதுதான், நாம் கற்ற கல்வி தகுதியானதாக மாறும்” என்று விரிவாக எடுத்துரைத்தார்.
1 More update

Next Story