இனோவா கிரிஸ்டா லிமிடெட் எடிஷன்


இனோவா கிரிஸ்டா லிமிடெட் எடிஷன்
x
தினத்தந்தி 30 Oct 2021 1:17 PM IST (Updated: 30 Oct 2021 1:17 PM IST)
t-max-icont-min-icon

டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் தனது பிரபலமான இனோவா கிரிஸ்டா மாடலில் லிமிடெட் எடிஷனை பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது.

கிரிஸ்டா மாடலின் முதல் தலைமுறை 2005-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 16 ஆண்டுகளில் மொத்தம் 9 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதைக் கொண்டாடும் விதமாக 16-வது ஆண்டில் லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்கிறது. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் கொண்டது. அதிக ஒளி வீசும் முகப்பு விளக்கு, டயமண்ட் கட் அலாய் சக்கரம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக ஸ்பெஷல் எடிஷன் வந்துள்ளது. பாதுகாப்பு அம்சமாக 7 ஏர் பேக்குகள் இதில் உள்ளன.

இது தவிர ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எகோ மற்றும் பவர் டிரைவ் ஓட்டும் நிலை, குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட 100 வகையான சிறப்பம்சங்களைக் கொண்டது. 360 டிகிரி கோணத்தில் சுழலும் கேமரா, டயர் காற்றழுத்தத்தை உணர்த்தும் கருவி, வயர்லெஸ் சார்ஜர், கதவு முனை விளக்கு, காரினுள் காற்றை சுத்திகரிக்கும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.

1 More update

Next Story