கவாஸகி எம்.ஒய் 22 இஸட் 650.ஆர்.எஸ்.


கவாஸகி எம்.ஒய் 22 இஸட் 650.ஆர்.எஸ்.
x
தினத்தந்தி 12 Nov 2021 8:32 PM IST (Updated: 12 Nov 2021 8:32 PM IST)
t-max-icont-min-icon

கவாஸகி நிறுவனம் புதிதாக எம்.ஒய் 22. இஸட் 650. ஆர்.எஸ். என்ற பெயரிலான மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இது 650 சி.சி. திறன் கொண்டது. சிறப்பான வடிவமைப்பு நவீன தொழில்நுட்ப கலவையாக இது வந்துள்ளது. பழங்கால மோட்டார் சைக்கிளை விரும்பும் இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வடிவமைப்பும், சீறிப்பாயும் வகையிலான நுட்பமும் கொண்டது.

நீண்ட தூர பயணத்துக்கேற்ப இருக்கை வடிவமைப்பு, எடை குறைவான அதேசமயம் ஸ்திரமான டிரெலிஸ் பிரேம், செங்குத்தான பின்புறத்தை இணைக்கும் சஸ்பென்ஷன், இரட்டை டயல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், பன்முக செயல்பாடு கொண்ட எல்.சி.டி., வட்ட வடிவிலான முகப்பு விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.
1 More update

Next Story